ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் வராஹபுரம் கிராமத்தில் விசித்திரமான பாம்பு ஒன்று சாலையோர பகுதிகளில் திரிந்துள்ளது. இரவு நேரத்தில் அப்பகுதியில் செல்லும் மக்கள் இதனைக் கண்டு அச்சம் அடைந்துள்ளனர். பார்ப்பவரை கவரும் வகையில் மஞ்சள் வெள்ளை நிறத்தில் இருக்கும் பாம்பு எந்த வகை சார்ந்தது என்பது தெரியவில்லை.
இந்த பாம்பைப் பாருங்கள்... கொஞ்சம் விசித்திரமானது...! - விசித்திரமான பாம்பு
ஆந்திரா: பார்க்க அழகாய் இருக்கும் ஆனால் மிகக் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பை வராஹபுரம் கிராம மக்கள் புகைப்படம் எடுத்து செல்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வராஹபுரம் கிராம மக்கள் அருகில் உள்ள சோடோராமின் வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர் ராமநரேஷ் அந்த பாம்பை மீட்டு அவை என்ன வகை பாம்பு என ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, அசாம், திரிபுரா மற்றும் மிசோரம் பகுதிகளில் சுற்றித் திரியும் பாம்பு வகை என்றும் இந்த வகை பாம்பு இப்பகுதிகளில் காண்பது மிகவும் அரிது எனக் கூறினார்.
மேலும், இந்த பாம்பு மிக கொடிய விஷத்தன்மை கொண்டது என்றார். இந்த பாம்பு குறித்து ஆர்வத்துடன் தெரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் அதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.