வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதில், சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரையன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "
தேர்தலில் வெற்றி பெற கலவரத்தை தூண்டுவார்களா என அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். தேர்தல் மட்டுமே வாழ்க்கை கிடையாது. கலவரங்களால் பயனடைவது ஒரே கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு ஆதாரங்களும் உள்ளது. கலவரம் நடைபெற்ற பிறகு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சொன்னதை குறிப்பிட விரும்புகிறேன்.
மக்கள் படுகொலை செய்யப்பட்டதை பார்த்தால் இது திட்டமிட்ட இனப்படுகொலை என்பது தெரியவருகிறது. இதனை நான் கண்டிக்கிறேன் என மம்தா தெரிவித்தார். இனப்படுகொலை என்பது நேரடியாக காஸ் சாம்பர்களில் அடைக்கப்பட்டு கொல்வது இல்லை. அது ஒரு செயல்முறை. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.