குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பாஜக அல்லாத ஐந்து மாநில முதலமைச்சர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் இதுவரை பதில் இல்லை.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முதலமைச்சர்கள் குரல்! - குடியுரிமை சட்டம் எதிர்ப்பு
டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக அல்லாத ஐந்து மாநில முதலமைச்சர்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
“எனினும் இது மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முடிவு அல்ல,” என்பதை மட்டும் தெளிவுப்படுத்தி உள்ளனர். இந்த சட்டத்திற்கு முதல் முதலில் எதிர்ப்பை பதிவு செய்த முதலமைச்சர் என்றால், அது கேப்டன் அமரீந்தர் சிங்கை சாரும்.
தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இச்சட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்திய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “மாநில அரசு இச்சட்டத்தை அமல்படுத்தாது. ஆகவே மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. மக்களை பிளவுப்படுத்தும் எந்த சட்டத்தையும் அமல்படுத்த மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.