காஷ்மீரை ஆட்சி செய்த ஹரி சிங் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் அரசுக்கு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டு வந்தன. சட்டப் பிரிவு 370இன்படி வழங்கப்பட்டு வந்த இந்த சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது வீட்டுச் சிறையிலுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு 370 சட்டப் பிரிவை ரத்து செய்திருப்பது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். ஏற்படவிருக்கும் பல மோசமான விளைவுகளுக்கு இந்த முடிவு அடித்தளமாக அமையக்கூடும்.