மேற்குவங்க மக்களவைத் தேர்தலுக்காக திரிணமுல் காங்கிரஸ் ஐந்து சினிமா நட்சத்திரங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 34 வருடம் ஆண்ட கம்யூனிஸ்ட் அரசை முடிவுக்கு கொண்டு வர பல வியூகங்களை மம்தா மேற்கொண்டார்.
அதில் சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்தி கடினமான தொகுதி வெல்வதும் ஒன்று. அதே முறையை இந்த மக்களவை தேர்தலிலும் பயன்படுத்த இருக்கிறது திரிணமுல் காங்கிரஸ். 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஐந்து சினிமா நட்சத்திரங்கள் களம் இறக்கப்பட்டுஅனைவரும் வெற்றி கண்டனர்.
இந்தத் தேர்தலில் தீபக் அதிகாரி, ஷதாப்தி ராய், மூன் மூன் சென் ஆகிய பழைய வேட்பாளர்களுடன் மிமி சக்ரபர்த்தி, நுஷ்ரத் ஜஹான் ஆகிய புதிய வேட்பாளர்களும் களம் காண உள்ளனர். மம்தா தன் முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியை வெற்றி கண்ட ஜாதவ்பூர் தொகுதியில் நடிகை மிமி களம் இறக்கப்படுகிறார்.
இந்தத் தொகுதியில்தான் மறைந்த கிருஷ்ண போஸ், சுபாஷ் சந்திர போஸின் மனைவி சிசிர் போஸ், சுகாகா போஸ் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி கண்டனர்.
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது.