தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

ஸ்ரீநகர்: அதிக பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்த, சுமார் 434 கி.மீ. நீளமுள்ள ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலை நான்கு மாதத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

srinagar highway road open

By

Published : Apr 29, 2019, 10:09 AM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பனிப்பொழிவு அதிகரித்ததைத் தொடர்ந்து, கந்தர்பால் மாவட்டத்தில் ஜஹாங்கீர் பகுதியில் தொடங்கி, கார்கில் மாவட்டத்தில் உள்ள டிராஸ் பகுதிவரை போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

பனிப்பொழிவு குறைந்ததையடுத்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு சுமார் 434 கி.மீ. நீளமுள்ள ஸ்ரீ நகர் - லே தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக நேற்று (ஏப்ரல் 28) திறக்கப்பட்டது. இந்த ஸ்ரீ நகர் - லே தேசிய நெடுஞ்சாலையானது காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக் பகுதியுடன் இணைக்கிறது.

பெக்கான் திட்டம் தொடங்கப்பட்டு எல்லை சாலை கூட்டமைப்பு மூலம் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் ஜஹாங்கீரிலிருந்து ஜீரோ பாயிண்ட் வரையுள்ள சுமார் 108 கி.மீ. தூரம் சாலைகளில் உள்ள பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன.

மேலும், விஜயாக் திட்டத்தின் மூலம் டிராஸிலிருந்து ஜீரோ பாயிண்ட் வரையுள்ள சுமார் 147 கி.மீ. தூரம் சாலைகளில் உள்ள பனிக்கட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. இந்தப் பணிகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றன.

இந்த ஸ்ரீ நகர்-லே தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் மூலம் லடாக் பகுதி மக்கள் பொருள்களை எளிதாக எடுத்துச் செல்ல பெரிதும் பயனாக இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details