இலங்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இதற்கு அதிபர் மைத்திரிபாலா சிறிசேனாவின் தனிப்பட்ட அரசியல் காழ்புணர்ச்சி தான் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யும் இலங்கை அதிபர்! - president
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா திருப்பதி ஏழுமலை கோயில் தரிசனம் செய்வதற்காக தனி விமான மூலம் இந்தியா வந்தடைந்துள்ளார்.
மைத்திரிபாலா சிறிசேனா
இந்நிலையில், அதிபர் மைத்திபாலா சிறிசேனா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக இந்தியா வந்தடைந்துள்ளார். தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்திறங்கியுள்ள அவர், நாளை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் சுப்ரபாத தரிசனத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.