இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். அவர் மேலும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத வகையில் வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து காட்சி ஊடகத்தில் கால் பதித்த ஸ்ரீசாந்த் பிக்பாஸ் போன்ற தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்றார்.
கன்னட சூப்பர் ஸ்டாருடன் திரையில் இணையும் ஸ்ரீசாந்த் - பிக்பாஸ்
பெங்களூரு: திரைத்துறையில் களமிறங்கியுள்ள பிரபல கிரிக்கெட்டரான ஸ்ரீசாந்த் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
இந்தாண்டு கன்னட படமான கேம்பிகவுடா 2வில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், இந்த படத்திற்கான டீசர் வெளியீட்டு விழா கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீ சாந்துக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடித்தது. தனது அடுத்த படமான தூம் எகெய்ன்(Dhoom Again) என்ற படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்க ஸ்ரீசாந்த்துக்கு புனித் ஆஃபர் அளித்துள்ளார். இதன் மூலம் திரை வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்கும் அதிர்ஷ்டம் ஸ்ரீ சாந்துக்குக் கிடைத்துள்ளது.