கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கையடுத்து வணிக வளாகங்கள், மதுபானக் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சிகரெட் கடத்தலிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.
ஊரடங்கின்போது வெளிநாட்டு சிகரெட்டுகள் வழக்கத்திற்கு அதிகமாக கைப்பற்றப்பட்டன. குறிப்பாக கம்போடியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 11.8 கோடி ரூபாய் மதிப்பிலான சிகரெட்டுகள் மும்பையில் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது.
கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ள அளவினை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் ஊரடங்கின்போது சட்டவிரோத சிகரெட் கடத்தல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாக பிக்கி என்றழைக்கப்படும் பொருளதாரத்தை அழிக்கும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான குழு தெரிவித்துள்ளது.