தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமான கதவுக்கு இடையே சிக்கி ஊழியர் பலி! - கொல்கத்தா

கொல்கத்தா: ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிந்த ஊழியர் ஒருவர், ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் கதவுக்கு இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Spice Jet

By

Published : Jul 10, 2019, 10:52 PM IST

கொல்கத்தா நேதாஜி விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் தரை இறங்கும் சாதனத்தை சரிசெய்யும் பணியில் அந்நிறுவன ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் கதவு ஒன்று தானாக முடவே அதில் சிக்கிக்கொண்ட ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தானது இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடந்ததாக, விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details