தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா காப்பீடு வழங்கும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம்! - ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம்

டெல்லி: பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும் வண்ணம் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் கரோனா காப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

கரோனா காப்பீடு வழங்கும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம்!
கரோனா காப்பீடு வழங்கும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம்!

By

Published : Jul 8, 2020, 11:04 PM IST

கரோனா காலத்தில், பயணிகள் விமான சேவையைப் பாதுகாப்பாக உணர ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தேர்தெடுக்கும் பயணிகள் தங்களக்குத் தேவையான காப்பீட்டை தேர்ந்தெடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், 50ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான பிரீமியத்தில் ரூ. 344 முதல் ரூ.1,564 வரை (ஜிஎஸ்டி உட்பட) செலுத்தி தங்களை காப்பீட்டை 12 மாதத்திற்கு பெற்றுக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காப்பீடானது மருத்துவமனை செலவுகள், மருத்துவமனைக்கு முந்தைய, பிந்தைய செலவுகள் என அனைத்தையும் வழங்கும். பயணி கரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்த பிறகும் ஆலோசனைகள் வழங்கும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த காப்பீட்டிற்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் கோ டிஜிட் பொது காப்பீட்டு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...சீனாவில் இருந்து பேருந்து வாங்கும் திட்டம் மாற்றப்பட்டுள்ளது - டெல்லி அரசு...!

ABOUT THE AUTHOR

...view details