மும்பையில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில அரசு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் கனமழை: ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற விமானம்! - கனமழை
மும்பை: கனமழை காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு வலுக்கிச் சென்று விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் ஏர்வெஸ் விமானம் மும்பை விமான நிலையத்தில் கனமழையால் ஓடுபாதையை விட்டு வலுக்கிச் சென்றதில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் மழையின் காரணத்தால் தற்காலிகமாக விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையத்திற்கு திசை மாற்றப்பட்டுள்ளது. சியோலில் இருந்து மும்பை வரும் விமானம் அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது போன்ற 54 விமானங்கள் மும்பையில் பெய்யும் கனமழையால் திசைமாற்றப்பட்டு பிற விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.