ஸ்பெஷல் ப்ரொடெக்சன் குரூப் (SPG) 1998ஆம் ஆண்டு பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்குவதற்காக, இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த சிறப்புப் பாதுகாப்பு நடைமுறைக்கு வந்த நாள் முதல், இன்று வரை அதை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குடும்பத்திற்கு வழங்கி வந்த நிலையில், இந்த சிறப்புப் படை பாதுகாப்பு, தற்போது வாபஸ் பெறப் பெற்றுள்ளது.
ராஜிவ் காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ்! - SPG removed for sonia, rahul and priyanga
டெல்லி: பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் படை பாதுகாப்பான 'எஸ்பிஜி'(SPG) பாதுகாப்பு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோரிடம் இருந்து திரும்பப் பெறப் பெற்றுள்ளது.
SPG Protection
இதன்மூலம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இனி ஸ்பெஷல் ப்ரொடெக்சன் குரூப்(SPG) எனும் சிறப்புப் படை பாதுகாப்பு வழங்கப்படாது. இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு "Z +" பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த, ஸ்பெஷல் ப்ரொடெக்சன் குரூப்பின் (SPG) பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Nov 8, 2019, 5:23 PM IST