கர்நாடகாவில் நடைபெற்றுவரும் வருமானவரி சோதனையை மேற்கோள்காட்டி, வருமானவரித் துறையினர் இன்று எங்கு சோதனை நடத்துகின்றனர் என்று தனக்கு தெரியவில்லை எனவும், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்கும் நோக்குடனே வருமானவரித்துறை செயல்பட்டுவருவதாகவும் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைக்கும் வருமானவரித்துறை - சீறும் சந்திரபாபு நாயுடு - குறி
ஹைதராபாத்: எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைத்து வருமானவரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் சோதனை செய்கின்றனர் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, கர்நாடகாவில் 24 இடங்களில்வருமானவரித்துறைநடத்தியசோதனையில் ரூ.1.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை எனவும் வருமானவரித்துறையினர் தெரிவித்திருந்தனர்.
மூன்று ஐபிஎஸ் அலுவலர்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியதன் பேரில் 24 மணி நேரத்தில் அவர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், ஆனால் முதலமைச்சரான நான் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கபடுவதில்லை எனவும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.