கரோனா வைரஸ் தொற்று கிருமியால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா, இத்தாலிக்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் உள்ளது. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 33 ஆயிரத்து 89 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த 15 நாள்கள் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 426 உயிர்களை கரோனா அரக்கன் விழுங்கியுள்ளான்.
இதனால் ஸ்பெயினில் கரோனா உயிரிழப்பு 2,182 ஆக அதிகரித்துள்ளது.