தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா-நேபாள எல்லையில் பிறந்த ’பார்டர்’ குழந்தை - மோடியை விமர்சித்த அகிலேஷ் - பார்டர்

பஹ்ரைச்: லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் இந்தியாவுக்கும் நேபாளத்திக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு ’பார்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Border
Border

By

Published : Jun 1, 2020, 8:34 PM IST

Updated : Jun 1, 2020, 9:21 PM IST

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜந்தாரா என்ற பெண் கடந்த மே மாதம் 30ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்தியாவுக்கும் நேபாளத்திக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இரு நாட்டு எல்லைப் பகுதியில் லாக்டவுன் நேரத்தில் குழந்தை பிறந்ததன் நினைவாக ”பார்டர்” என்ற வித்தியாசமான பெயரை அப்பெண் சூட்டியுள்ளார்.

இந்நிலையில், பார்டர் என பெயிரிடப்பட்டுள்ள அக்குழந்தையின் எதிர்காலத்திற்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்து சமாஜ்வாதி கட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தத் தகவலை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்பால் காஷ்யாப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”லாக்டவுன் அமலில் உள்ள நேரத்தில் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே பிறந்த ’பார்டர்’ குழந்தையின் எதிர்காலம் குறித்தும், மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு வந்துகொண்டிருந்த ரயிலில் பிறந்த இரட்டை குழந்தைகளான ’லாக்டவுன்’ மற்றும் ’அங்கேஷ்’ குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் வருங்காலத்தில் யாராவது உண்மையான கடிதம் ஒன்றை எழுத வேண்டும்.

கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இதுபோன்ற அவலநிலை குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிடாமல், கடிதமாக இதனை எழுத வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று கடந்த மே 30ஆம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை விமர்சிக்கும் விதமாக தற்போது அகிலேஷ் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா லாக்டவுன் - ஊரே ஒன்றுக்கூடி சிறுமிக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து!

Last Updated : Jun 1, 2020, 9:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details