மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மூலமே நிரப்பப்படுகின்றன. இதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில், நீட் மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து சோனியா காந்தி எழுதியுள்ள கடித்ததில், "அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படி, மத்திய, மாநில / யூனியன் பிரதேச மருத்துவ கல்வி நிறுவனங்களில் முறையே 15%, 7.5%, 10% இடங்கள் எஸ்சி, எஸ்டி, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இருப்பினும், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2017ஆம் ஆண்டு முதல், பல மாநிலங்கள் ஓபிசி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் ஒபிசி வகுப்பினர் சுமார் 11,000 இடங்களை இழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.