தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்சிக்குள் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளும் சோனியா - சி. பி. மிட்டல், குல்தீப் இந்தோரா

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களாக சி. பி. மிட்டல், குல்தீப் இந்தோராவை நியமித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சோனியா
சோனியா

By

Published : May 16, 2020, 10:40 AM IST

Updated : May 16, 2020, 11:05 AM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் முகுல் வாஸ்னிக்கை மத்தியப் பிரதேச பொறுப்பாளராக நியமித்து, அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, சி.பி. மிட்டல், குல்தீப் இந்தோரா ஆகியோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், "மிட்டல், இந்தோரா ஆகியோர் புதிய செயலாளர்களாகவும், மத்தியப் பிரதேச பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலச் செயலாளர்களாக இருந்த வர்ஷா கேக்வாத், ஹர்ஷ்வர்தன் சப்கல் ஆகியோர் அவர்களது பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சுதான்ஷு திருப்பதி, சஞ்சய் கபூர் ஆகியோர் செயலாளர்களாகத் தொடர்வார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்ஷா கேக்வாத், ஹர்ஷ்வர்தன் சப்கல் ஆகியோர் செயலாளர்களாக இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டதாக அறிவிப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மத்தியப் பிரதேச பொறுப்பாளர் பதவியை தீபக் பாபரியா ஏப்ரல் 30ஆம் தேதி ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்து வந்த சிந்தியா, பாஜகவில் இணைந்ததையடுத்து பாஜக அங்கு ஆட்சியைப் பிடித்தது.

இதையும் படிங்க: ’சிக்கனத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை ஆளுநர் மாளிகை பின்பற்றும்’ - கிரண்பேடி

Last Updated : May 16, 2020, 11:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details