டெல்லியில் கடந்த இரு நாள்களாக அரங்கேறிவரும் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ”டெல்லி வன்முறைக்குப் பின்னணியில் சதித்திட்டம் உள்ளது. தேர்தல் காலத்தின்போதே இது உணரப்பட்டது. பயத்தையும் வெறுப்பையும் தூண்டும் விதத்தில் பல்வேறு பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாகப் பேசிவந்துள்ளனர். டெல்லியின் தற்போதைய நிலைக்கு மத்திய அரசும் மத்திய உள்துறை அமைச்சரும்தான் பொறுப்பேற்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.
டெல்லி காவல் துறை செயலற்றுக் கிடக்கும் நிலையில், கடந்த 72 மணி நேரத்தில் 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். வட கிழக்கு டெல்லியில் வன்முறை தொடர்ச்சியாக அரங்கேறிவருகிறது.