பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா அக்கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். அவரது இந்த முடிவு பலருக்கு ஆச்சரியத்தையும், பாஜகவினருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
பாஜகவில் மரியாதை இல்லை: நடிகை சோனாக்ஷி சின்ஹா - பாஜக
மும்பை: பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா கூறியுள்ளார்.
இந்நிலையில், சத்ருகன் சின்ஹாவின் மகளும் பிரபல இந்தி நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா இதுகுறித்து பேசுகையில், ”காங்கிரஸ் கட்சியில் இணையவேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட முடிவு. நாம் இருக்கும் இடத்தில் நடக்கும் விஷயங்களால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றால், நாம் அதை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம். அதைத்தான் என் தந்தை செய்தார். என் தந்தை உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு வழங்கப்படவேண்டிய மரியாதையை பாஜக வழங்கவில்லை. ஆகையால் அவர் மாறவேண்டிய நேரம் ஏற்பட்டதாக நான் நினைத்தேன்” என்றார்.