தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவிலிருந்து திரும்பினேன் ஆனால் வீடு திரும்ப முடியவில்லை… மகனால் பரிதவிக்கும் தாய் - ரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

ஹைதராபாத்: கரோனா வைரஸிலிருந்து குணமடைந்த தாயால் தனக்கும் வைரஸ் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் தனது தாயை வீட்டிற்குள் அனுமதிக்காத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

son-abandons-covid-recovered-mother-in-telangana
son-abandons-covid-recovered-mother-in-telangana

By

Published : Jul 26, 2020, 2:59 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஃபிலிம் நகரைச் சேர்ந்த 55 வயதான பெண்மணி ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தாயால் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மகனும், மருமகளும் வீட்டை பூட்டிவிட்டு, அவரை வீட்டிற்குள் சேர்க்க அனுமதி மறுத்துவிட்டனர்.

வீட்டிலிருப்பவர்கள் கைவிரித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரிடம் நெருங்கவே அச்சப்பட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த பெண்மணி தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு அரசு அலுவலர்களை நாடியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details