தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - ராணுவ வீரர் பலி - இந்திய பாகிஸ்தான் ராணுவம் மோதல்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Kupwara
Kupwara

By

Published : Sep 5, 2020, 10:35 PM IST

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள நௌகாம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதற்கு பதிலடிதரும் விதமாக இந்திய ராணுவத்தினரும் தாக்குல் நடத்தினர்.

இந்த மோதலின்போது இந்திய ராணுவ வீரர் பூபேந்தர் சிங் உயிரிழந்துள்ளார். மேலும் வெங்கடேஷ், ஷஜால் என்ற இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காஷ்மீரின் ஷாபூர், கிர்னி, தேக்வார் ஆகிய பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறயதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தற்சார்பு இந்தியா என்ற பெயரில் நாட்டையே தனியாருக்கு விற்கிறது மத்திய அரசு - சிபிஐ(எம்)

ABOUT THE AUTHOR

...view details