தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதல் பனியில் நனைந்த இமாச்சல்!

தர்மசாலா : இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லஹால், ஸ்பிட்டி மாவட்டத்தில் இன்று (அக்.26) காலை இந்த ஆண்டின் முதல் பனி பொழிந்தது.

By

Published : Oct 26, 2020, 4:50 PM IST

இமாச்சல் முதல் பனியில் நனைகிறது!
இமாச்சல் முதல் பனியில் நனைகிறது!

இமாச்சலப் பிரதேசத்தில் குளிர்காலம் தொடங்கியதைக் குறிக்கும் விதமாக இன்று (அக்.26) அதிகாலை லஹால், ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்கள் முதல் பனிப்பொழிவில் நனைந்தன.

தங்களது மாவட்டங்களுக்கே உரிய பனிப்பொழிவை சந்தித்த உள்ளூர்வாசிகள் இதனால் உவகை அடைந்தனர். மாநிலத் தலைநகரான சிம்லாவிலும் மணாலியிலும் வறண்ட வானிலைதான் நிலவிவருகையில், மாநிலத்தின் உயர்ந்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் லேசான பனி பெய்துள்ளது.

இது குறித்து மாநில வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”லஹால், ஸ்பிட்டி, குலு, சம்பா, சிம்லா, சிர்மவூர், கின்னவூர் மாவட்டங்களில் உள்ள உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு உள்ளது.

இமாச்சல் முதல் பனியில் நனைகிறது!

இதில் மாநிலத்தின் மிகக் குளிர்ந்த பகுதியான கீலாங்கில் மைனஸ் ஒரு டிகிரியும், கல்பாவில் 2.7 டிகிரியும், தர்மசாலாவில் 11.6 டிகிரியும், மணாலியில் 4.2 டிகிரியும் நிலவுகிறது. சிம்லாவில் 11.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மேலும், இந்த வாரம் மாநிலத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...ஓ.பி.சிக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு வஞ்சகப்போக்கு - வைகோ தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details