ஒடிசா மாநிலம் ஜெய்பூரில் அசனஜார் கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் ராமகாந்த் நாயக். இவர் வழக்கம் போல் அவருடைய நிலத்தில் வேலை செய்தபோது, திடீரென அவரை பாம்பு கடித்துள்ளது.
பொதுவாக பாம்பு கடித்தால் பதற்றம் ஏற்பட்டு வேகமாக மருத்துவமனைக்கு செல்வது மனித இயல்பு. ஆனால் ராமகாந்த் நாயக்கோ எதற்கும் அஞ்சாமல், ''மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன். நமது கோயிலில் இருக்கும் தெய்வம் காப்பாற்றும்'' என கோயிலில் அமர்ந்துள்ளார்.
இதனையறிந்த கிராம மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அதில் செல்ல மறுத்து தெய்வமே கதி என கோயிலில் அமர்ந்துள்ளார். இதனால் இவரை காப்பாற்றுவதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதனையும் அந்த கோயிலின் பூசாரியே செய்துள்ளார்.