அமெரிக்காவின் ஃபளோரிடாவில் இருந்து ஹவாய்க்கு சுற்றுலா பயணி ஒருவர் விமானம் மூலம் சென்றுள்ளர். இதையடுத்து, ஹவாய் மாகாணம் மாயில் தங்குவதற்காக தனது வீட்டிற்குச் சென்ற அவர், தனது பையில் இருந்து துணிகளை வெளியே எடுத்தபோது பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஹவாய் மாகாணத்தில் பாம்பினை விழுங்குவதற்கு இயற்கையாக வேட்டையாடக்கூடிய உயிரினம் ஏதுமில்லை என்பதால் பாம்பு தடை செய்யப்பட்டுள்ளது.
இலவசமாக விமானத்தில் பயணித்த பாம்பு! - ஹவாய்
ஃபுளோரிடாவிலிருந்து விமானம் மூலம் ஹவாய் சென்ற சுற்றுலா பயணியின் பையில் பாம்பு ஒன்று பயணம் செய்துள்ள நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலவசமாக விமான பயனியின் பையில் ஹவாய் பயனித்த பாம்பு
இதனால் பெரும் பதற்றத்திற்கு ஆளான இவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்பினை கைப்பற்றி ஹோனலுலுவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுலா மேற்கொண்டுவிட்டு ஸ்காட்லாந்து திரும்பிய ஒருவர் பையில் பாம்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.