கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா.
இந்நிலையில், உத்ரா அவரது பெற்றோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை சூரஜ் பாம்பைக் கொண்டு கடிக்கவைத்து கொலைசெய்தார்.
இது குறித்து உத்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் சூரஜை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டார். மேலும், அவருக்குப் பாம்பு கொடுத்து உதவிய சுரேஷ் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் சூரஜை உத்ராவின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று தடயங்களைச் சேகரித்தனர். மேலும், கைரேகை வல்லுநர்கள் உள்ளிட்ட அலுவலர்களை அழைத்துச் சென்று சில முக்கியத் தடயங்களைச் சேகரித்தனர்.
இந்நிலையில், சூரஜை கண்ட உத்ராவின் பெற்றோர் கொந்தளித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், எவ்வாறு பாம்பைகொண்டுவந்து, எங்கு பதுக்கிவைத்தார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மனைவியைக் கொன்ற கணவரிடம் தீவிர விசாரணை இதையடுத்து, சூரஜை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!