தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்! - காரில் போதைப்பொருள்கள் கொண்டுசென்றவர் கைது

பாட்னா: பிகாரில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை காரில் கொண்டுச் சென்றவரை மடக்கிப்பிடித்த காவல் துறையினர், அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர்.

ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்
ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்

By

Published : May 30, 2020, 2:40 PM IST

பிகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் என் ஹெச் 28 நெடுஞ்சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள்கள் கொண்டுச் செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரை மடக்கிப்பிடித்த காவல் துறையினர், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீரஜ் குமார் என்பது தெரியவந்தது.

மேலும், காரிலிருந்த போதைப்பொருள்கள் அவருடைய உறவினருக்கு விற்பதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. பின்னர், அவரிடமிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் போதை மிட்டாய்கள் பறிமுதல் - 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details