பாஜகவின் முக்கிய தலைவரான ஸ்மிருதி இரானி, குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2011ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இதையடுத்து மோடி தலைமையிலான அமைச்சரவையில் 2014ஆம் ஆண்டு மே முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை வரை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். இதன் பின்னர் 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018ஆம் ஆண்டு மே மாதம் வரை தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
மீண்டும் மத்திய அமைச்சரானார் ஸ்மிருதி இரானி!
டெல்லி: அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து அபார வெற்றிபெற்ற ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஸ்மிருதி இரானி
இது மட்டுமல்லாமல் ஐவுளித்துறை அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோட்டையாக திகழ்ந்த அமேதியில் ஸ்மிருதி இரானி அமோக வெற்றிபெற்றார். இந்நிலையில், ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.