தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்மிருதி இரானிக்கு நெருக்கமானவர் சுட்டுக் கொலை! - up

லக்னோ: அமேதி தொகுதியில் வெற்றிபெற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நெருக்கமான கிராமத்தின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv - Bharat

By

Published : May 26, 2019, 8:14 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பரௌலியா (Baraulia) கிராமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சுரேந்தர் சிங் (50). நேற்று இவர் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு, மாலை மூன்று மணியளவில் இவர் தன் வீட்டுத் திண்ணையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், சுரேந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில், சுரேந்தர் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிங்கின் உடலைக் கைபற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அமேதி காவல் துறையினர், குற்றவாளிகளை வலைவீசித் தேடிவருகின்றனர்.

பரௌலியா கிராமத்தின் முன்னாள் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கிராமத்தில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், "இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்துள்ளோம். கொலை குறித்து தீவரமாக விசாரணை செய்துவருகிறோம். அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் அக்கிராமத்தின் முன்னாள் தலைவர் என்பதால், முன்பகை காரணமாக இது நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. அரசியல் பகையால் அது அரங்கேறியதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சுரேந்தர் சிங்கினின் சகோதரர் ராஜேந்திர சிங்கிடம் கேட்டபோது, "தலைவர் இங்குதான் எப்போதும் உறங்குவார். அவர் மிகவும் அன்பானவர். அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது. இதுபோன்று அவருக்கு நேரும் என்று அவர் எப்போதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details