17ஆவது மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்ற நிலையில், நாளை முடிவுகள் எண்ணப்படவுள்ளன.
'தேச துரோகிகளுக்கு ஆதரவு தரும் எதிர்க்கட்சியினர்' ஸ்மிருதி இரானி சாடல் - தேச துரோகிகள்
டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில், நாட்டை பிரிக்க வலியுறுத்திய தேச துரோகிகளுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் மறைமுகமாக சாடியுள்ளார்.
smrithi
இந்நிலையில், தேர்தல் குறித்து ட்விட்டரில் கருத்து பதிந்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தத் தேர்தல் மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான மோதலாகும். இந்த நாடு துண்டுத் துண்டாகப் போகவேண்டும் என்று கோஷமிட்ட எதிர்க்கட்சியினருக்கு எதிராக மக்கள் உறுதியாக நின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி" என மறைமுகமாக சாடினார்.