ஐக்கிய அரசு அமீரக நாடான துபாயில் நடைபெறும் கண்காட்சி உலகச் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கண்காட்சியில் உலகின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் வந்து குவிவார்கள்.
உலக நாடுகளைச் சேர்ந்த சிறந்த பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் தகவல் தொழில்நுட்பம், கருத்துகள் பகிர்வுக்கு ஏற்ற இடமாக இது விளங்குகிறது.
இந்தக் கண்காட்சியில் மொத்தம் 190 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்த மாதம் தொடங்கிய கண்காட்சியானது அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம்வரை நடைபெறும். அதற்காக ஒவ்வொரு நாடுகளுக்கும் அரங்குகள் அமைத்து கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்தியாவுக்கு நிரந்த அரங்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் நட்பு நாடாக இந்தியா தொடர்கிறது. கிட்டத்தட்ட 30 லட்சம் இந்தியர்கள், அமீரகத்தில் வசிக்கின்றனர். 24 மில்லியன் டாலர் பணம் இந்தியாவுக்கு கிடைக்கிறது.