ஸ்ரீநகரில் டிஜிபி தில்பாக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, சிஆர்பிஎஃப் பேட்மாலூவில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.
இதில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது, இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய சிஆர்பிஎப்பின் துணை கமாண்டன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார். காசர் ரியாஸ் என்ற பெண் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவரது மரணம் ஒரு துரதிர்ஷ்டவசமான இழப்பு, இறந்தவரின் குடும்பத்தினருக்கு நான் அனுதாபம் தெரிவிக்கிறேன்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஏழு நடவடிக்கைகளில் 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில், ஹிஸ்புல் முஜாஹிதீனின் உயர் தளபதி ஜூனியாட் செஹ்ராய் உள்பட ஐந்து பேர் ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் படையினருக்கு வெற்றிகரமான ஆண்டாகும். இந்த ஆண்டு 72 பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் ஜம்முவில் 12 பேர் உள்பட 177 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 22 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள். இது காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை காட்டுகிறது.
அல் பத்ர் போன்ற பயங்கரவாத அமைப்புகளை புதுப்பிக்கவும், புதிய பயங்கரவாதிகளை உருவாக்கவும் பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான பயங்கரவாத நடவடிக்கைகள் கராச்சியில் உள்ள பாகிஸ்தான் அமைப்புகளால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன" என்றார்.
முன்னதாக, பயங்கரவாதத்தில் இணைந்த 20 பேர் வன்முறையைத் தவிர்த்துவிட்டு அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளனர்" என்றார்.