நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின் தங்கியுள்ளதாக பல அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆந்திர மாநிலம் குண்டூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டில் வறுமை அதிகரிப்பதற்கு பாஜகதான் காரணம். நாளுக்கு நாள் நாட்டின் வளர்ச்சி மோசமடைந்து கொண்டே இருக்கிறது.
அடுத்த சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திடும் கம்யூனிஸ்டுகள்! - கம்யூனிஸ்ட்கள்
டெல்லி: அடுத்த சுதந்திரப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆரம்பிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
Sitaram yechury
கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி 0.5 ஆகதான் உள்ளது. 3 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். ரயில்வே துறையில் தனியார்மயம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. விவாதமின்றி நாடாளுமன்றத்தில் 26 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டைக் காப்பாற்ற அடுத்த சுதந்திரப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆரம்பிக்கும். அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.