உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் எட்டு காவலர்களைச் சுட்டுக்கொன்ற வழக்கின் முக்கியக் குற்றவாளி விகாஸ் துபேக்கு எப்படி ஜாமின் கிடைத்தது என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதுதொடர்பான அறிக்கையை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவில்லை.
8 காவலர்கள் படுகொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம்! - 8 காவலர்கள் படுகொலை வழக்கு
லக்னோ: எட்டு காவலர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் கால அவகாசம் வேண்டும் என சிறப்பு விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து அக்குழுவினர் கூறுகையில், "கான்பூரில் உள்ள சிவ்லி காவல் நிலையத்திற்குள் அமைச்சர் சந்தோஷ் சுக்லா கொலை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களைப் பெறுவதில் சிக்கல் நீடித்துவருகிறது. மற்ற வழக்குகளில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமின் தொடர்பான ஆவணங்களும் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எதுவும் பெறப்படவில்லை. இந்தக் கும்பலின் அப்போதேய தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியும் நடைபெறுகிறது. குறைந்தபட்சம் அறிக்கை முடிக்க ஒரு மாதம் தேவைப்படும். இதுதொடர்பாக அரசாங்கத்திற்கு எடுத்துரைத்து கால அவகாசம் கேட்கப்படும்" என்றனர்.