மக்களவை தேர்தலுக்கான நான்காம் கட்டவேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் பாஜக தன் முதல் பட்டியலை இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக பிகாரின் பாட்னா சாஹிப் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் களம் இறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நடிகரின் இடத்தில் ரவி சங்கர் பிரசாத்? - ரவி சங்கர் பிரசாத்
பாட்னா: நடிகரும் பாஜக மக்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்ஹாவுக்கு பதிலாக ரவி சங்கர் பிரசாத்தை பாட்னா சாஹிப் மக்களவை தொகுதியில் பாஜக களம் இறக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தத்தொகுதியில் நடிகர் சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாகவே பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் கொல்கத்தாவில் நடந்த எதிர்கட்சி தலைவர்களின் மாநாட்டிலும் பங்கு பெற்றார்.
பிகார் முன்னாள்முதலமைச்சர் லாலு பிரசாத்தை சந்தித்த பிறகு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பாக பிகாரில் போட்டியிடப் போவதாகவும், உத்தர பிரதேசம் முன்னாள்முதலமைச்சர் அகிலேஷை சந்தித்தப் பிறகு சமாஜ்வாடி கட்சி சார்பாக உத்தர பிரதேசத்தில் போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.