மக்களவைத் தேர்தலில் வாக்குகளை சிதறடிக்க வேண்டாம், ஒற்றுமையாக இருந்து பாஜகவை தோல்வியடைய செய்யுங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சருமான நவுஜோத் சிங் சித்து பீகார் மாநிலம் கதிஹரில் நடந்த தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.
வாக்குகளை சிதறடிக்காதீர்கள்; முஸ்லிம்களுக்கு சித்து கோரிக்கை - சித்து
பாட்னா: மக்களவைத் தேர்தலில் வாக்குகளை சிதறடித்து பாஜகவுக்கு உதவிட வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவுஜோத் சிங் சித்து பீகார் மாநிலம் கதிஹரில் நடந்த தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.
மோடியை விமர்சித்த சித்து
இதுகுறித்து அவர் கூறுகையில், 'உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓவைசி போன்ற ஆட்கள் இங்கு வந்திருப்பது முஸ்லிம் வாக்குகளை பிரிப்பதற்கு. ஆனால், நீங்கள் ஒன்றாக இருந்து வாக்களித்தால் மோடியை தோற்கடித்து விடலாம்' என்றார்.
'இது சிக்ஸர் போன்றது. இதுபோன்ற சிக்ஸரை அடித்து மோடியை வெளியே அனுப்புங்கள்' என்று கிரிக்கெட் மொழியில் மோடியை விமர்சித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால், நாடு அழிந்து விடும் எனவும் கூறினார்.