இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "கரோனா நேரத்தில் மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகள் கொண்ட வசதி மிகவும் தேவைப்பட்டது. அதை ஏற்பாடு செய்து தற்போது மருத்துவமனையில் பலர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது, தேசிய தலைநகரில் கரோனா எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் படிப்படியாக நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது" என்றார்.
மருத்துவமனையில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை - அரவிந்த் கெஜ்ரிவால் - படுக்கை வசதிகள்
டெல்லி: மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
முன்னதாக, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் டெல்லியின் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள டிஆர்டிஓ கட்டிய சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள டிஆர்டிஓ-கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் கோவிட் -19 மருத்துவமனை 11 நாள்களில் கட்டிய தற்காலிக மருத்துவமனையாகும். அங்கு 250 ஐசியு படுக்கைகள் உள்பட 1,000 படுக்கைகள் உள்ளன.