கருப்புச் சந்தை மற்றும் பதுக்கல்களை தடுக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், பிரமதர் நரேந்திர மோடியின் 21 நாள் முடக்க நடவடிக்கை குறித்தும், மத்திய அமைச்சகத்தின் முடிவுகள் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்தக விற்பனை நிலையங்களுக்கு தடை விலக்கு!
டெல்லி: கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்தக விற்பனை நிலையங்களுக்கு மட்டும் இந்தத் தடை விலக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், மத்திய, மாநில அரசுகள் முடக்க நடவடிக்கையை சரிவர செயல்படுத்தி மக்களை பாதுகாக்க துரிதமாக செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பு கூட்டாட்சி முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 562ஆக உயர்ந்துள்ளது. நமது அன்புக்குரியவர்களை பாதுகாப்பது நம் கடமை. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்தக விற்பனை நிலையங்களுக்கு மட்டும் 21 நாட்கள் தடை விலக்களிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.