மத்தியப் பிரதேச முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன், சிவராஜ் சிங் சவுகானுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சி சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.