மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிவுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸுடன் கைகோர்த்து இந்த சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது.
ஓர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே வெற்றி! - மகாராஷ்டிரா ஓர்லி தொகுதி
மும்பை: மகாராஷ்டிரா ஓர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே அமோக வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக-சிவசேனா கூட்டணி 156 தொகுதிகளையும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 108 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் பேரனும், யுவ சேனா தலைவருமான ஆதித்யா தாக்கரே, அவரை எதிர்த்து போட்டியிட்ட சுரேஷ் மனேவை 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, யுவ சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே, தான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியை வளர்ச்சியின் வடிவமாக மாற்றுவேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.