மும்பை: சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சார்நைக் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், பாகிஸ்தான் நாட்டு கிரெடிட் கார்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் ட்வீட் செய்ததாக கூறி, அவர் மீது சார்நைக் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "என்னிடம் பாகிஸ்தான் நாட்டு கிரெடிட் கார்ட் இல்லாத நிலையில், என்னை குறித்தும் எனது குடும்பத்தார் குறித்தும் அவதூறு பரப்புவதற்காகவே சிலர் இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். சோதனையின் போது அமலாக்கத் துறையினர் பாகிஸ்தான் கிரெடிட் கார்ட் எதையும் பறிமுதல் செய்யவில்லை.