தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘தலையை எடு... ஒரு கோடி தரேன்’ அதிரவைத்த சிவசேனா தலைவர்! - கமலேஷ் திவாரி கொலை வழக்கு

மும்பை: சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக், கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

கமலேஷ் திவாரி கொலை வழக்கு

By

Published : Oct 19, 2019, 9:09 PM IST

கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக பிடிபட்ட கொலையாளிகளின் தலையை எடுப்பவர்க்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சிவசேனாவின் மூத்த தலைவர் அருண் பதாக். இதுகுறித்து காணொலிப் பதிவை வெளியிட்டுள்ள அவர், “கொலையாளைகளின் தலையை எடுப்பவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என பிதற்றியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, நேற்று(அக்டோபர் 18) கழுத்து அறுக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்துள்ளது.

கமலேஷ் திவாரியை கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

அவர்கள் தீபாவளிக்கு இனிப்புகள் வழங்கச் செல்வதாகக் கூறி வீட்டிற்குள் சென்றிருக்க வேண்டும் என்றும், இனிப்பு பைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் சந்தேகித்திருந்தனர். இந்நிலையில், இன்று கமலேஷ் திவாரி கொலை தொடர்பாக சூரத்தைச் சேர்ந்த மூவரை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

கொலையாளிகளை அழைத்து வரும் காவல் துறையினர்

குற்றம் சாட்டப்பட்டவர்கள், மவுலானா மொஹ்சின் ஷேக் (24), குர்ஷித் அகமது பதான் (23) பைசன் (21) என அடையாளம் காணப்பட்டனர். 2016ஆம் ஆண்டிலேயே, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details