தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய கோரிக்கைகளை சிவசேனா முன்வைக்கிறது - அமித் ஷா - புதிய கோரிக்கைகளை சிவசேனா முன்வைக்கிறது

டெல்லி: ஏற்றுகொள்ள முடியாத புதிய கோரிக்கைகளை சிவசேனா முன்வைப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Amit Shah

By

Published : Nov 13, 2019, 8:08 PM IST

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அம்மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால், சிவசேனா ஆதரவு தர மறுத்ததால் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினால் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சி அமைக்க சிவசேனா, காங்கிரஸ் உதவியை நாடியது.

ஆதரவு குறித்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் இறுதிவரை முடிவெடுக்கவில்லை. இதனால் ஆட்சி அமைக்க கூடுதல் கால அவகாசம் கேட்டு சிவசேனா ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த ஆளுநர், மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூடுதல் காலஅவகாசம் கேட்டு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு கோஷ்யாரி பரிந்துரைத்தார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்பார் என நானும் பிரதமர் மோடியும் பலமுறை தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளோம். அப்போது யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது எங்களால் ஏற்க முடியாத பல கோரிக்கைகளை சிவசேனா முன்வைக்கிறது.

மகாராஷ்டிராவிற்கு அளிக்கப்பட்டதுபோல் வேறு எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்க அவகாசம் வழங்கப்பட்டதில்லை. ஆட்சி அமைக்க 18 நாட்கள் வழங்கப்பட்டது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகுதான் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். சிவசேனாவோ, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியோ, நாங்களோ ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்கள் ஆட்சி அமைக்க ஆளுநரை அனுகலாம்" என்றார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணையும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்!

ABOUT THE AUTHOR

...view details