பிகார் மாநிலம் பாட்னா பகுதியைச் சேர்ந்த சின்கா 2014 நாடாளுமன்றத்தேர்தலில் பாட்னா ஷகிப் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஆளும் பாஜக அரசையும், மோடியையும் எதிர்த்து பொது மேடைகளில் சத்ருகன் சின்கா பேசி வந்தார். இதனால் சின்கா நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடலாம் என அரசியல் வட்டாரத்தில் ஒருவித பேச்சு அடிப்பட்டது.
இதை உறுதிபடுத்தும் விதமாக பாஜக கட்சி தற்போது வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில், ரவிசங்கர் பிரசாத் பாட்னா ஷகிப் பகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.