தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இது அது இல்ல ! ஆனா நாங்களும் வெளிநாட்டில் கெத்து தான்' - காங்கிரஸ் தலைவர் - latest about modi

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட மரியாதை அவருக்கானது அல்ல, அது இந்திய பிரதமர் என்ற முறையில் கிடைத்த மரியாதை என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்துள்ளார்.

shasi tharoor

By

Published : Sep 25, 2019, 8:54 AM IST

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இதற்கு முன்னதாக ஜவஹர்லால் நேரு - இந்திரா காந்தி ஆகியோர் கடந்த 1954ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்த போது அவர்களுக்கும் இதேபோன்று பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார்.

மோடிக்கு அல்ல இந்தியாவிற்கு கிடைத்த மரியாதை

ஆனால், சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் எடுக்கப்பட்டது என அவரை ட்விட்டரில் பின்தொடர்வோரால் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக மீண்டும் ட்விட் செய்த சசி தரூர்,’

தான் வெளியிட்ட அந்த புகைப்படம் நேரு அதே ஆண்டில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றிருந்தபோது எடுக்கப்பட்டது’ என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும் அந்தப் புகைப்படத்தில் தான் வெளியிட்டிருந்த செய்தியில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்

நரேந்திர மோடிக்கு வழக்கப்பட்ட கௌரவம் அவருக்கானது இல்லை என்றும் இந்தியாவின் பிரதமர் என்ற வகையில் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை எனவும் கூறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஐநாவில் எழுப்பப்படும் காஷ்மீர் பிரச்னை!

ABOUT THE AUTHOR

...view details