தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரேநாளில் 1,035 பேருக்கு கரோனா: ஏழாயிரத்தை கடந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை! - கோவிட் 19 தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,035 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447ஆக அதிகரித்துள்ளது.

Sharpest ever spike in India's COVID-19 tally with 40 deaths, 1,035 cases in 24 hrs; total count at 7447
Sharpest ever spike in India's COVID-19 tally with 40 deaths, 1,035 cases in 24 hrs; total count at 7447

By

Published : Apr 11, 2020, 11:06 AM IST

மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,035 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412-இல் இருந்து 7,447ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்த வைரஸால் நேற்று மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளதால் அதன் மொத்த எண்ணிக்கை 199இலிருந்து 239ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் அதிக பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுவே முதன்முறையாகும். இதனிடையே, குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 504இல் இருந்து 634ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிப்புகள், உயிரிழப்புகள் நேரிட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அம்மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 1,574 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 188 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 911 பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா: ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்த விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details