ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி, வரும் 25ஆம் தேதி 68ஆவது தொடராக ஒலிபரப்பப்படவுள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் உரையாற்ற வேண்டிய தலைப்பு குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை கேட்டுள்ளார்.
மான் கி பாத் : மக்களிடம் ஐடியா கேட்ட மோடி! - மான் கி பாத்
டெல்லி : மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்ற வேண்டிய தலைப்பு குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி ஆலோசனை கேட்டுள்ளார்.
மோடி
நமோ செயலி மூலமாகவோ MyGov இணையதளம் மூலமாகவோ மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிறப்பான ஆலோசனைகளைக் கூறுபவர்களுக்கு மோடி தனது உரையின்போது பாராட்டுகளைத் தெரிவிப்பார்.
முன்னதாக, 67ஆவது மனத்தின் குரல் நிகழ்ச்சியில், கார்கில் போரின் 21ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு உரையாற்றிய மோடி, நட்புணர்வோடு செயல்பட்ட இந்தியாவை பாகிஸ்தான் முதுகில் குத்தியது என வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.