தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா சார்க் ஆலோசனைக் கூட்டம் ஒரு புதுவித ராஜதந்திரம் - அமித் ஷா - கரோனை பரவல்

டெல்லி: கொரோனா வைரஸ் குறித்து நேற்று சார்க் நாட்டுத் தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒரு புதியவித ராஜதந்திரம் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

AMIT SHAH
AMIT SHAH

By

Published : Mar 16, 2020, 9:40 AM IST

கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற நோய்த் தோற்று உலகை அச்சுறுத்திவரும் வேளையில், இதனைக் கூட்டாகச் சேர்ந்து எதிர்கொள்ளவது குறித்து திட்டம்தீட்ட சார்க் நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து ட்வீட் செய்துள்ள உள் துறை அமைச்சர் அமித் ஷா, "இன்று நடைபெற்ற சார்க் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் புதிய ராஜதந்திர விடியலாகும். உலகிற்கு இது முன்னோடியாக விளங்குகிறது.

உலகமே தன் குடும்பம் என நம்பும் நாடு இந்தியா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா சர்வதேச பிரச்னைகளை எதிர்கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சார்க் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து ட்வீட் செய்திருந்த மோடி, "பிரச்னைகளை ஒன்றுகூடி கையாளுவதே மிகச் சிறந்தது. நம்மிடையே கூட்டணி வேண்டும், குழுப்பம் இருக்கக்கூடாது; முன்னெச்சரிக்கை வேண்டும் பதற்றம் இருக்கக் கூடாது.

இந்தப் போரை நாம் ஒன்று சேர்ந்தே எதிர்கொள்ள வேண்டும். இதனை ஒன்றாகத்தான் வெல்ல முடியும். இந்த முயற்சி உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும்" எனக் கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் காரணமாக இதுவரை ஐந்தாயிரத்து 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை அடுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலியில் நோய் பாதிப்பு தீவிரமாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனாவால் டென்மார்கில் முதல் உயிரிழப்பு - மூடப்படும் எல்லைகள்!

ABOUT THE AUTHOR

...view details