இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தலைநகர் டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 2 ஆயிரத்தும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க படுக்கைகள் பற்றாக்குறை உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மத்திய அரசின் உதவியால் தெற்கு டெல்லியின் சத்தார்பூரில் உள்ள சர்தார் படேல் கரோனா சிறப்பு மையத்தில் படுக்கைகள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அறிகுறியின்றி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என தனியாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.