உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அதே நீதிமன்றத்தில் வேலை செய்த முன்னாள் பெண் ஊழியரான ஒருவர் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இக்குற்றச்சாட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மூத்த நீதிபதி பாப்டே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றனர்.
ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது - Ranjan GOGOI
டெல்லி: உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மேல் எழுந்த பாலியல் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மூன்றுபேர் கொண்ட குழு அதனை நிராகரித்துள்ளது.
உச்ச நீதமன்றம்
இதனை இன்று விசாரித்த மூன்று பேர் கொண்ட குழு, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி மேல் எழுந்த பாலியல் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
Last Updated : May 6, 2019, 6:00 PM IST